சாந்தன் வீடு வந்து சேர்ந்தார்!!
சாந்தனின் உடலம் அவரது குடும்பத்தினரிடையே கண்ணீர் மனங்களை கனக்க கையளிக்கப்பட்டுள்ளது.
உணர்வு பூர்வமான இறுதி நிகழ்வுக்கள் மக்களையல்ல ஊடகவியலாளர்களை கூட பணி தாண்டி தாக்கியிருக்கின்றது.
உயிரற்ற பூவுடலாய் தாயை அடைந்த சாந்தனை "யாரும் அழ வேண்டாம். வாங்கோ என்ர குட்டி அண்ணா" எனப் பதிகம் பாடி, ஆரத்தி எடுத்து தன் ணனின் பூவுடலை வரவேற்றார் தங்கை.திரண்டிருந்த சனத்தின் மனம் விம்மி வெடித்தது.
இதுபோதும் - என் சந்ததி பல நூற்றாண்டுகளுக்கு "உங்கள்" சதி பேசும் என நிலை தகவல் பதிந்துள்ளார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர்.
அதே வேளை எப்படித் தாங்கிக் கொள்வது என்றே புரியவில்லை அண்ணனை வரவேற்பதா அல்லது குளறி அழுவதா என்று சாந்தனின் வித்துடல் ஆலாத்தி எடுத்து அவருடைய குடும்பத்தினரால் ஆசையை நிறைவேற்றும் விதமாக வரவேற்று கூட்டிச் செல்லப்பட்டு "ஓம் நமசிவாய" பாடல் எல்லோராலும் பாடப்பட்டு மீளாத் துயில் கொள்ளுகிறார் என பதிவிட்டுள்ளார் மற்றொரு ஊடகவியலாளர்.
Post a Comment