வெடுக்குநாறி பூசாரி வைத்தியசாலையில்!
வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக முல்லைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இலங்கை காவல்துறையின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப்பேரையும் விடுதலைசெய்து வவுனியா நீதிமன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் புதன்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5நாட்கள் சிறைச்சாலையில் அவர் உண்ணாவிரதம் இருந்திருந்தார்.
அதனால் அவரது உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே வவுனியா வெடுக்குநாறிமலை ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் பலதரப்புக்களும் ஆராய முற்பட்டுள்ளன.

Post a Comment