ஒக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல்!



இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று (26)  நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில், அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. கடந்த 76 வருட ஆட்சியாளர்களின் சகாப்தம் முடிவுக்கு வர போகின்றதெனவும் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக பிரச்சாரங்களை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார யாழ்ப்பாணத்திற்கு 4ம் திகதி வருகை தரவுள்ளார்.


No comments