பச்சை அனகோண்டா பாம்புகளின் புதிய இனங்கள் கண்டு பிடிப்பு

20 ஆண்டுகளாக அமேசான் மழைக்காடுகளில் பல்வேறு வகையான அனகோண்டாக்களின் மரபணு அமைப்பைப் பற்றி ஆய்வு செய்த அமேசான்

ஆராய்ச்சியாளர்கள் உலகின் பொிய பாப்பு இனமான அனகோண்டாவில் ஒரு பச்சை அனகோட்டாவை ஈக்வடோரின் மழைக்காடுகளில் கண்டு பிடித்துள்ளனர்.

இது 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் நெருங்கிய உறவைக் கொண்ட அனகோண்டா பாம்பிலிருந்து பிரிந்தது.

இருப்பினும் அவை இன்றுவரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன.

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நெதர்லாந்து உயிரியலாளர்  200-கிலோகிராம் எடைகொண்ட அனகோண்டா பாம்புடன் நீந்துவது போன்ற 6.1 மீட்டர் நீளமுள்ள 

நெதர்லாந்து உயிரியல் ஆராச்சியாளரான ஃப்ரீக் வோங்க் 200 கிலோகிராம் எடைகொண்ட 6.1 மீட்டர் நீளமுள்ள அனகோண்டா பாம்புக்கு அருகில் நீரில் நீந்துகிறார். பாம்பு நகரும் போது அவரும் பாம்பு செல்லும் வழித்தடத்தில் நீந்திச் செல்கிறார்.

அமேசான் காடுகளில் ஒரே ஒரு வகை பச்சை அனகோண்டாவான ''யூனெக்டெஸ் முரினஸ்'' (Eunectes Murinus) மட்டுமே இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால் இந்தக் கட்டுபிடிப்புக்குப் பின்னர் பச்சை அனகோண்டாவில் ''யூனென்டென் அக்கியாமா'' (Eunectes Akiyama) என்ற புதிய இனத்தை அறிவியல் இதழான scientific journal Diversity இல் இணைத்து வெளியிடப்பட்டது.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக தென் அமெரிக்காவில் காணப்படும் அனகோண்டா இனங்களை ஆராய்ந்து வரும் பேராசிரியர் ஃப்ரை, இந்த இரண்டு இனங்களும் ஏறக்குறைய 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கொருவர் பிரிந்தன என்பதைக் காட்ட இந்த கண்டுபிடிப்பு அனுமதிக்கிறது என்றார்.

ஆனால் உண்மையிலேயே ஆச்சரியம் என்னவென்றால், இந்த இரண்டு பாம்புகளிடையே மரபணு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இரு பாம்புகளிடையே நீண்ட கால வேறுபாடு இருந்தபோதிலும், இரண்டு விலங்குகளும் முற்றிலும் ஒரே மாதிரியானவை என்று அவர் கூறினார்.

பச்சை அனகோண்டா பாம்புகள் பார்வைக்கு மிகவும் ஒத்ததாக இருந்தாலும், 5.5 சதவிகித மரபணு வேறுபாடு உள்ளது. இது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது. இது நம்பமுடியாத அளவு மரபணு வேறுபாடாகும். குறிப்பாக சிம்பன்சிகளிடமிருந்து நாங்கள் 2 சதவீதம் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறோம் என்ற சூழலில் அப்பாம்புகளைப் பார்கும் போது ஆச்சரியமாக உள்ளது என்று பேராசிரியர் ஃப்ரை கூறினார்.

ஈக்குவடோரில் ஏற்படும் எண்ணெய்க் கசிவுகளால் அனகோண்டா பாம்புகள் ற்றும் அராபைமா மீன்கள் அதிகமாகப் பாதிப்படைகின்றன.

No comments