இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு சுமத்ரா தலைநகர் படாங் வியாழன் முதல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதே நேரத்தில் தெற்கே பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் ஏராளமான மண், பாறைகள் மற்றும் வேரோடு சாய்ந்த மரங்கள் மலைகளில் இருந்து கீழே விழுந்ததில் பல கிராமங்களை அழித்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவல்களின்படி 21 பேர் உயிரிழந்துடன் மேலும 6 பேரைக் காணவில்லை. 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக அரசு தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
20,000 க்கும் மேற்பட்ட வீடுகள் கூரை வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment