சாந்தனின் உடல் நல்லடக்கம் !



தமிழகத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மயானத்தில் மக்களின் அஞ்சலியுடன்; நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் திடிரென உயிரிழந்திருந்திருந்தார்.

இந்நிலையில் சாந்தனின் புகழுடல் தாயகத்திற்கு எடுத்து வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் உடுப்பிட்டியில் உள்ள அவரது பிறந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் பிறந்த வீட்டிலும்; இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

உயிரிழந்த தனது மகன் சாந்தனிற்கு தாயார்;, உணவு ஊட்டியமை உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறியது.

தனது தாயின் கையால் ஒரு வேளை உணவு உண்ண வேண்டும் என்பது சாந்தனின் இறுதி ஆசையாகவும், தமது மகனுக்கு பல்சுவை உணவுகளை சமைத்துக் கொடுக்கவேண்டும் என்பது சாந்தனின் தாயின் இறுதி ஆசையாகவும் இருந்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் எள்ளங்குளம் மயானத்திற்கு எடுத்து வரப்பட்ட போது வீதிகளில் திரண்ட மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

இறுதியாக எள்ளங்குளம் மயானத்தில்; உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


No comments