அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு


பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கனேமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் போதே , பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபரை கைது செய்வதற்காக சென்ற வேளை, பொலிசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் எனவும் , அதன் போது பொலிஸார் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வேளை அந்நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். 

படுகாயமடைந்த நபரை ராகம வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலில் காயமடைந்த  பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments