நவல்னியின் மரணத்திற்காக புடினும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவார்கள் - மனைவி யூலியா
ரஷ்ய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னியின் மரணம் உண்மையாகிவிட்டால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது கூட்டாளிகள் தண்டிக்கப்படாமல்"போக மாட்டார்கள் என்று கிரெம்ளின் விமர்சகரின் மனைவி யூலியா தெரிவித்துள்ளார்.
அலெக்ஸி நவல்னியின் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஆர்க்டிக் தண்டனைக் காலனியில் இன்று வெள்ளிக்கிழமை இறந்ததாக ரஷ்யாவின் சிறைச்சாலை நிர்வாகம் முன்னதாக கூறியது. 47 வயதான அவர் உத்தியோகபூர்வ ஊழலுக்கு எதிராக போராடினார் மற்றும் புடினின் கடுமையான எதிரியாக பாரிய கிரெம்ளின் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார்.
நவல்னியின் மரணம் குறித்த நேரடி உறுதிப்படுத்தலை இன்னும் பெறவில்லை என்றும், பிராந்திய நீதித்துறை அதிகாரிகளின் பொதுவான அறிவிப்பை மட்டுமே பார்த்ததாகவும் கூறினார்.
யூலியா நவல்னயா சர்வதேச சமூகம் ஒன்று கூடி ரஷ்யாவில் உள்ள "கொடூரமான ஆட்சிக்கு" எதிராக போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கிழமை மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் தனது கணவர் பற்றிய செய்தி வெளிவரும் முன் திட்டமிடப்பட்ட தோற்றத்தில் பேசினார்.
அவர் தனது உரையில், தனது கணவர் இறந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து சில சந்தேகங்களை வெளிப்படுத்தினார்.
ரஷ்ய அரச மூலங்களிலிருந்து பிரத்தியேகமாக நாங்கள் பெறும் பயங்கரமான செய்திகளை நாங்கள் நம்ப வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை என்று யூலியா நவல்னாயா கூறினார்.
புடின் மற்றும் புடினின் அரசாங்கத்தை நாங்கள் நம்ப முடியாது என்று அவர் மேலும் கூறினார். அவர்கள் எப்போதும் பொய் சொல்கிறார்கள் என்றார்.
எவ்வாறாயினும் ஒன்றுபட்டு தீமையை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும் புடினும் அவரது ஆதரவாளர்களும் விரைவில் பொறுப்புக் கூறப்படுவார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment