அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment