தாழையடி தண்ணீர்,3இலட்சம் பேருக்காம்!
தாழையடி திட்டத்தின் ஊடாக 3 லட்சம் பயனாளிகளுக்கு விரைவில் குடிநீர் வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இரணைமடு பிரச்சினைக்கு அனைத்து விவசாய அமைப்புக்களுடனும், சிவில் அமைப்புக்களுடனும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் கலந்துரையாடி அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தீர்வு எடுக்கப்படும்.
பாலியாறு திட்டத்திற்காக அரசாங்கம் 250 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாலியாறு திட்டத்தினை கடன் மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்தும் போது 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும்
Post a Comment