பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் சண்டையில் 26 பேர் பலி!!


பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரிடையே வன்முறை வெடித்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை எங்க மாகாணத்தில் ஹைலேண்ட்ஸ் பகுதியில் இரண்டு பழங்குடியினரிடையே நடந்த பதுக்கியிருந்து தாக்குதல் நடத்திய சண்டையில் ஆண்கள் கொல்லப்பட்டனர். பழங்குடியினர் வாழும் கிராமங்களில் உள்ள புதர் முழுவதும் இறந்தவர்களின் உடலங்கள் காணப்பட்டன.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிமீ (373 மைல்) தொலைவில் உள்ள வபாக் நகருக்கு அருகே சம்பவ இடத்தில் காவல்துறையினர் உடல்களை சேகரிக்கத் தொடங்கினர்.

குறைந்தது 53 பேர் இறந்துவிட்டதாக காவல்துறை முதலில் தெரிவித்தது. பின்னர் இறப்பு எண்ணிக்கை 26 என மாற்றியமைக்கப்பட்டது.

நிலைமையை அடக்குவதற்கு காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் தங்களால் ஆனதை முடிந்தளவு செய்ததாக காவல்துறையின் மூத்த அதிகாரி ஜார்ஜ் காகாஸ் மேலும் கூறினார்.

பப்புவா நியூ கினியாவில் தொலைதூர நிலப்பரப்புகளில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு எங்க மாகாணத்தில் 60 பேர் கொல்லப்பட்ட மோதல்களுக்கு காரணமாக இருந்த அதே பழங்குடியினர்தான் இந்த வன்முறையில் ஈடுபட்டனர்.

ஹைலேண்ட்ஸ் பகுதி நீண்ட காலமாக வன்முறையுடன் போராடி வருகிறது. சட்டவிரோத துப்பாக்கிகளின் வருகை மோதல்களை மிகவும் கொடியதாக்கியுள்ளது மற்றும் வன்முறைத் தொடர்ந்தும் தூண்டியுள்ளது.

வளர்ந்து வரும் பழங்குடியின மோதல்கள் பெரும்பாலும் நிலம் மற்றும் சொத்துக்களை அபகரிப்பதில் இடம்பெறுகிறது.

No comments