கோத்தபாயவை தனிப்பட்ட செயலாளரும் கைவிட்டார்!
கோட்டாபய ராஜபக்சவினை அவரது நெருங்கிய சகாக்களும் கைவிடத்தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் நீண்டகாலமாக அவரது பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து சுகீஸ்வர பண்டார இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியவர் சுகீஸ்வர பண்டார . எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மற்றொரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment