அலி சப்ரி பயணித்த கார் விபத்து - ஒருவர் படுகாயம்


நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின்  15 ஆம் தூண் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அளுத்கம மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, ​​நாடாளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments