தமிழரசு தலைவர் தெரிவும் பிழை:சுமா குற்றச்சாட்டு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை, கட்சிக்குள் பேசி இணக்கத்துடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவின் போது முறைகேடுகள் நடந்ததாக எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பொதுச் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட முறைகள், யாப்புக்கு முரணாகப் பலர் சேர்த்துக்கொள்ளப்பட்டமை சம்பந்தமாகப் பல நியாயமான கருத்துக்கள் வெளிப்பட்டாலும், போட்டியாளன் என்ற வகையிலே அந்த முடிவை நான் முழுமையாக, பகிரங்கமாக ஏற்றிருக்கின்றேன் என புதிய தலைவர் சி.சிறீதரனிற்கு எழுதிய கடிதத்தில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவது.

இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரோடு உரையாடிவிட்டு திருகோணமலை மாவட்ட கிளைத்தலைவர் சண்முகம் குகதாசனை 'மட்டக்களப்பின் சம்மதத்தோடு' பொதுச்செயலாளர் பதவிக்குத் தெரிவு செய்வதாக அறிவித்தீர்கள். இதை மத்திய செயற்குழு எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. 

எமது கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாகவும், சட்டப்படியும் தாங்களே இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர். 

ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவிருந்த பொது நிகழ்வு தவறான ஆலோசனைகளின் பேரிலும், கலந்துரையாடல் இன்றியும், அதிகாரமற்றதும் சட்டத்துக்கு முரணான அறிவிப்பினாலும் துரதிரஸஷ்டவசமாக பிற்போடப்பட்டுவிட்டது. எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவ ரீதியாக பதவியேற்பது முக்கியமான விடயமாகும். அதுமட்டுமல்லாமல், தங்களது தலைமையுரையில் எமது மக்களுக்கான விடிவுப் பாதை எப்படியானது என்ற தங்களது யோசனைகளை செவிமடுக்கப் பலரும் காத்திருந்தார்கள். அத்தோடு, எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைத்திருக்கும். ஆகவே, தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்க பொது நிகழ்வை நடத்துமாறும் அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


No comments