மீசாலையில் கடை எரிந்து நாசம்


மீசாலை - இராமவில் பகுதியில் உள்ள கடை கட்டடத்தில் புதன்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக    கடை எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு  விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments