சந்திப்புக்காக எமக்கு அழைப்பு கிடைக்கவில்லை - கஜேந்திரன்


தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

கொழும்பிலிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவ்வாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், குறித்த சந்திப்பை புறக்கணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும் ஜனாதிபதியின் கொள்கையை கைவிட்டால் மாத்திரமே, தமது கட்சி அரசியல் தீர்வு தொடர்பான ஜனாதிபதியின் கலந்துரையாடலில் பங்கேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

No comments