யார் கூடுதல்?
ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்குமிடையிலான சந்திப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை விட அரச அமைச்சர்கள் மற்றும் சிங்கள அதிகாரிகளே நிரம்பி வழிந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், சாணக்கியள் இராசமாணிக்கம், ஜீ.கருணாகரன்,டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே முன்னதாக தனித்து பேசிக்கொள்ளும் செல்வம்,சித்தார்த்தன்,சுமந்திரன்,சிவி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னணியின் இருநாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment