வெளியே முற்படுபவர்கள் வசம் போதைப்பொருள்!

 


வடபுலத்திலிருந்து கனடா உள்ளிட்ட நாடுகளிற்கு வெளியேற முற்படுகின்ற இளம் சமூகத்தில் கணிசமானோர் போதைபொருள் பாதிப்பிற்குள்ளானவர்களாக இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அவ்வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.  அவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது , நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டுள்ளது.


No comments