பாரிஸ் விமானத்தின் தரையிறங்கும் பெட்டிக்குள் ஒருவர் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டார்


அல்ஜீரியாவில் இருந்து பாரிஸ் நகருக்கு வந்த வர்த்தக விமானத்தின் தரையிறங்கும் பெட்டியில் மறைந்திருந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அல்ஜீரியாவின் ஓரானில் இருந்து ஏர் அல்ஜீரி விமானம் நேற்று வியாழக்கிழமை பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து வந்திறங்கிய விமானத்தை தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தியபோது, ​​விமானத்தின் அண்டர்கேரேஜ் பகுதியில் ஒருவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டரை மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னரும் உயிருக்கு ஆபத்தான கடுமையான தாழ்வெப்பநிலையில் அந்த நபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

குறிப்பிட்ட நபருக்கு 20 வயது இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவரிடம் எந்தவித அடையாளமும் இருக்கவில்லை. தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

30,000 முதல் 40,000 அடிகள் (9,000 முதல் 12,000 மீட்டர்கள்) உயரத்தில் வணிக விமானம் பயணம் செய்தது. 

குறித்த பறப்பின்போது வெப்பநிலை பொதுவாக -50 டிகிரி செல்சியஸ் (-58F) வரை குறைகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தரையிறங்கும் கியர் பெட்டியில் பயணிக்கும் எவரும் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தரவுகளின்படி, 1947 மற்றும் 2021 க்கு இடையில் 132 பேர் வணிக விமானங்களின் தரையிறங்கும் கியர் பெட்டிகளில் இதுவரை பயணிக்க முயன்றனர். இவ்வாறு பயணித்தவர்களில் 77 விழுக்காட்டினர் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் நைஜீரியாவில் புறப்பட்ட விமானம் கனடா சென்று பின்னர் கனடா டொராண்டோவில் இருந்து நெதர்லாந்து அம்ஸடர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் ஒரு விமானத்தின் தரையிறங்கியது. அப்போது கியர் பெட்டியில் ஒரு ஆணில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து பிரித்தானியா ஹீத்ரோவுக்கு வந்த விமானத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது ஒரு உடல் தென்மேற்கு லண்டனில் உள்ள ரிச்மண்டில் உள்ள பகுதியில் விழுந்தது. இரண்டாவது நபர் 10 மணி நேர பறப்பின் பின்னர் விமானத்தில் உயிருடன் மீட்கப்பட்டார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments