வடக்கு கடலில் நாள்தோறும் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீண்டும் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்பரப்பில் கைதாகியுள்ளனர்.
இதனிடையே கைதானவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (13) காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை (13)அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதன் போது 02 படகுகளும், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
Post a Comment