தளபதிகளது 5நாள் தண்ணீர் செலவு 11 இலட்சம்!
யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டாலும் இலங்கை படைகளது தளபதிகள் தமது சுகபோகவாழ்க்கையினை விட்டுவிட தயாரில்லை.
2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உண்டு மகிழ்வதற்காக, ஐந்து நாட்களுக்கு கிட்டத்தட்ட 11 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு முரணாக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் படி, மேற்படி பணியாளர் கல்லூரியின் விவகாரங்களை ஆய்வு செய்ய வந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளுக்கே இவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுவிருந்திற்கென பெருமளவு பணம் அள்ளிவீசப்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
Post a Comment