இரணைமடு :வான்கதவுகள் திறப்பு!
வடபுலத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா, மாங்குளம் பகுதிகளில் அதிகளவு மழை பெய்வதால், இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் நாளை அதிகாலை திறக்கப்படவுள்ளது.
இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 32 அடியை தற்போது நெருங்கியுள்ளது. நாளை அதிகாலை நீர்மட்டம் 33 அடியை எட்டும் என்பதினால், மேலும் நீர்வரத்து இருக்கும் என்பதினாலேயே குளத்தின் வான் கதவுகள் நாளை அதிகாலை திறக்கப்படவுள்ளது.
இரணைமடுக்குளம் 36 அடி ஆழம் கொண்ட குளம் ஆகும். இரணைமடுவுக்கு நீரேந்தும் இரண்டு ஆறுகளிலும் பெருமளவு நீர் வரத்து காணப்படுகின்றது.வான் பாயும் பகுதிக்குள் இறங்குதல், மீன்பிடித்தல் என்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Post a Comment