திருமலைக்கு தமிழ்நாட்டு குழாய் வழி விநியோகம்
மன்னாரிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் எடுத்துச்செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்ற நிலையில் இலங்கையில் எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், திருகோணமலைக்கும் இடையே எண்ணெய்க் குழாய் இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோருடன் இந்தியன் பெற்றோலிய கூட்டுறவின் செயற்பாட்டுத் தலைவர் மற்றும் இந்திய பெற்றோலிய அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டதாக தெரியவருகின்றது.
திருமலையினையடுத்து எரிபொருளை எடுத்துச்செல்ல உள்நாட்டு ரயில்வே பாதைக்கு அருகாமையில் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எரிபொருள் விலையைக் குறைக்கக் கூடிய சாத்திய கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு திருமலையினை முழுமையாக ஆக்கிரமிக்க தனது காய் நகர்த்தல்களை முன்னெடுத்துவருவது தெரிந்ததே.
Post a Comment