செட்டிக்குளத்தில் வயோதிப தம்பதியினர் வெட்டி படுகொலை


வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயோதிப தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் (வயது 72) மற்றும் அவரது மனைவியின் கனகலக்சுமி (வயது 68) ஆகிய இருவருமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

தம்பதியின் மகன் செட்டிக்குளம் பகுதியில் நடத்தி வரும் வர்த்தக நிலையத்தை அண்டிய பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

அந்நிலையில் மகன் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தனது வர்த்தக நிலையத்தை பூட்டி சென்ற நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை வர்த்தக நிலையத்தை திறந்த போதே , வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாக உள்ள தங்குமிடத்தில் தனது பெற்றோர் இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதை அடுத்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை சடலத்திற்கு அருகில் இருந்து பெரியளவிலான மூன்று கத்திகளை மீட்டுள்ளனர். அத்துடன் கொலையான பெண் அணிந்திருந்த 5 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளமையும் தெரிய வந்துள்ளது 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 



No comments