கார்த்திகைப்பூவுக்கும் அலர்ஜி!எதிர்வரும் வாரம் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அந் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை பயன்படுத்தக் கூடாது என இலங்கை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் மற்றும் பொதுச் செயலாளரர் ச.கீதன் ஆகியோரை நேற்றைய தினம்(19) கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக கார்த்திகை பூவை கூட பயன்படுத்தக் கூடாது என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் காவல்துறையினரின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாவீரர் தின நினை கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாதென மல்லாகம் நீதிமன்றமும் அறிவித்துள்ளது.

தெல்லிப்பழை மற்றும் அச்சுவேலி காவல்துறையினர்; தாக்கல் செய்த வழக்கை நிராகரித்த மல்லாக நீதிமன்றம் நினை கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாதென தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உற்பட நான்கிற்கு மேற்பட்டவர்கள் சட்டத்தரணிகளாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.


No comments