விஷம் அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற மாணவன்


விஷம் அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்ற மாணவன் ஆசிரியர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனின் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பாடசாலை ஆசிரியர்கள் பலர் தன்னையும், தாயாரையும் தொடர்ந்து திட்டியதால் பொறுக்க முடியாமல் இந்த மாணவன் விஷம் அருந்தி விட்டு பாடசாலைக்கு வந்ததாகவும், குறித்த மாணவனிடம் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறியதை அடுத்து, மாணவன் விஷம் அருந்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

உடனே ஆசிரியர்கள் குறித்த மாணவனை வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments