காசு மேலே காசு:காத்திருந்த விலங்கு



ரணிலால் நியமனம் பெற்ற அதிகாரிகள் பலரும் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிவருகின்றனர். 

10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கும் வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை வெளியிடுவதற்காக அதிகார சபையின் தலைவர் இலஞ்சம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.


இரண்டு இடைத்தரகர்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட மூவரும் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments