ரணிலின் சகபாடிக்கு விடுதலை10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும்  ரணிலின் நண்பருமான சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவருடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட்ட மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 10 ஆம் திகதி  கைது செய்யப்பட்டனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக 10 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


No comments