இலங்கையில் தபாலகமும் விற்பனையில்?தபால் சேவைகள் தொழிற்சங்கங்கள் நாளை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளதையடுத்து, 08, 09, 10 ஆம் திகதிகளில் தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

 நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை  இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் தீர்மானம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்களால் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது

No comments