தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டமை மனிதாபிமானத்தின் அடிப்படையிலையாம்
தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமானது மனிதாபிமான அடிப்படையில் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளுடன் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு சில மணி நேரத்தில் அவர்கள் அனைவரும் அவர்களின் இரண்டு படகுகளில் கடற்படையினரால் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய நிதியமைச்சரின் தலையீட்டினால் தான் கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரிடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடற்தொழிலாளர்களின் படகு இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்திருந்தனர்.
பின்னர் படகின் இயந்திரத்தின் பழுதை திருத்தி , அதில் வந்தவர்களை மீள அவர்கள் நாட்டுக்கே அனுப்பி வைத்தனர். இதனை நாம் மனிதாபிமான செயற்பாடாகவே பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment