யாழில். பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி


யாழ் மாவட்ட பொலித்தீன் விற்பனையாளருக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம் வியாழக்கிழமை யாழில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், பொலித்தீன் ,பிளாஸ்டிக் விற்பனையாளருக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான விழிப்பூட்டல் இடம்பெற்றதுடன் விழிப்பூட்டல் பேரணியும் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர், து.சுபோகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் திருக்குடும்பகன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





No comments