கிளிநொச்சியில் 52 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது


கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில்   சுமார் 52 கிலோ கிராம்  கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து  வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

No comments