வடக்கு கிழக்கில் 18ஆம் திகதி வரையில் மழை தொடரும்
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் கனமானது முதல் மிக கனமானது வரை மழை கிடைக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்காள விரிகுடாவில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு முதல் ஈரப்பதம் நிறைந்த காற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்குள் வருகைதரும்.
எனவே இன்றைய தினம் இரவு முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 14,15 மற்றும் 16ம் திகதிகளில் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேவேளை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment