திரிபோசா பக்கற்றுக்களைத் திருடிய இருவர் கைது!
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோசா மா பக்கற்றுக்களைத் திருடிச் சென்ற இருவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி திரிபோசா பக்கற்றுகள் திருடப்பட்டுள்ள நிலையில் 7ஆம் திகதி இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”கருவப்பங்கோணி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் திரிபோசா மா பக்கற்றுக்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர்
Post a Comment