யாழில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு


நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு வடமாகாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

உலக சுகாதார நிறுவனம் வருடந்தோறும் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை பிரகடனம் செய்து  வருகின்றது. இலங்கையிலும் தற்போது இந்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

அதன் பிரகாரம் வடமாகாணத்தில் வைத்தியர்களின் பங்குபற்றுதலில் கருத்தரங்கு இன்றைய தினம் நடைபெற்றது. 

பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் காலப்போக்கில்  பல்வேறு வகையான மாற்றம் அடைகின்றன. இதனால் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதை கடினமாக்குகிறது. 

 இவை வழமையான  Antibiotics களுக்கு எதிராக வளரும் ஆற்றலை  பெறும் அபாயம் காணப்படுகிறது.  இதன் விளைவாக  நோய் பரவல், கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயம் அதிகரிக்கும்.

ஆகவே Antibiotics  கட்டுப்பாட்டுடன் பாவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 


No comments