பிக் மீ சாரதி மீது தாக்குதல் - 3 நாட்களின் பின்னர் முறைப்பாட்டினை பெற்ற யாழ்ப்பாண பொலிஸார்


யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புக்கமைய யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பலாலி வீதியில் திருநெல்வேலி பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போதும் பொலிஸாரும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பிக்மீ சாரதி கவலை வெளியிட்டதுடன் பிக்மீ நிறுவனத்திற்கும் தகவலளித்தார்.

அதனை அடுத்து குறித்த நிறுவனம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து, சாரதியை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments