அம்பாறையில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் , பேருந்தும் நேருக்கு நேர் மோதியதினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இருவரும் மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment