கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வந்த சொகுசு பேருந்து யாழில் விபத்துக்குள்ளானது


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்தும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

அதன்போது கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த சிலரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

No comments