சாவகச்சேரியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு
ஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் சேதவத்த கால்வாய்க்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
Post a Comment