பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணை!


 பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில், அண்மையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின் போது பருத்தித்துறையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பில் உரிய விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

No comments