காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,546 ஆக உயர்வு


காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,546 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 756 பேர் உட்பட, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 6,546 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சண்டை தொடங்கியதிலிருந்து குறைந்தது 2,704 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 17,439 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,546 ஆக அதிகரித்துள்ளது.

சண்டை வெடித்ததில் இருந்து குறைந்தது 2,704 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், 17,439 பேர் காயமடைந்துள்ளனர்.  

ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் சந்திப்பு இன்று லெபனானில் நடைபெற்றது. லெபனான் தலைநகர் பெரூட்டில் நடந்த சந்திப்பின்போது காசா மற்றும் பாலஸ்தீன மக்களின் உண்மையான வெற்றிக்கான இலக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments