சீன மீன் மோசடி:தொடர்பில்லை-டக்ளஸ்



சீனாவிலிருந்து இலங்கைக்கு மீன்களை இறக்குமதி செய்வதற்கு  அனுமதித்திருக்கவில்லையென அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் பிடிக்கப்படாத அல்லது மிக அரிதான  மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் இருந்து மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற மீன்களை இறக்குமதி செய்வதில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மீன் இறக்குமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய காலத்தில் பிடிக்கப்படுகின்ற அல்லது பிடிபடாத மீன்களை தான் இறக்குமதி செய்யலாம் என இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தேன்.

அதேபோன்று நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் இவ்வாறே இறக்குமதி செய்ய முடியும் எனவும் கூறியிருக்கின்றேன்.

அந்தவகையில்தான் இறக்குமதி செய்ததாக கூறுகிறார்கள். அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments