மின்சாரம் மேலே! மேலே!!




 ஆகஸ்ட் 10, 2022 முதல் 157 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 10, 2022 இல், இலங்கையில் மின்சார கட்டணம் 75%, பெப்ரவரி 15, 2023 இல் 66.2% மற்றும் 20 ஆம் திகதி 18% ஆக அதிகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம் 14.12 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி பதினான்கு மாதங்களில் 157% மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின் சட்டத்தின் 5 மற்றும் 30 பிரிவுகளின்படி, மின் கட்டணத் திருத்தம் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஒரு வருடத்தில் இரண்டு முறை செய்யப்படலாம், ஆனால் சட்டத்திற்கு மாறாக மூன்றாவது முறையாக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments