யாழில். சிறுவன் மீது கத்திக்குத்து - இளைஞன் கைது


யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான். 

தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் , தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். 

வீட்டில் இருந்த உறவினரான சிறுவன் , உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்திருந்த வேளை சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

அதனை அவதானித்த சிறுவனின் பெற்றோர் , தமது பிள்ளையை இளைஞனிடம் இருந்து பாதுகாத்து , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , பலாலி பொலிஸாருக்கும் அறிவித்தனர். 

அதனை அடுத்து பலாலி பொலிஸார் கத்தி குத்து தாக்குதல் நடாத்திய இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments