3 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு பதவி உயர்வு!


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் குற்றப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. கரவிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.டபிள்யூ.எம். சேனாரத்னவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments