யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது


ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் விசேட நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்தனர். 

அதன் போது அப்பகுதியில் நடமாடிய இளைஞர்களை சோதனையிட்ட போது , 24 வயதுடைய இளைஞன் ஒருவரின் உடைமையில் இருந்து 250 மில்லி கிராம் ஹெரோயினும் , 22 வயதுடைய மற்றுமொரு இளைஞனின் உடைமையில் இருந்து 150 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments