வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 56 பேர் உயிரிழப்பு


வியட்நாமில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஹனோய் நகரில் உள்ள 9 அடுக்கு குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது. பெரும்பாலோர் வீடுகளில் இருந்தனர். அவர்கள் தீயில் சிக்கி உயிர்தப்ப போராடினர்.

தீயணைப்பு வீரர்கள் 150க்கும் மேற்பட்ட மக்களை மீட்கப் போராடினர். குறுகிய சந்து காரணமாக தீயணைப்பு வாகனங்கள் விபத்து நேரிட்ட பகுதியில் நெருங்க முடியாமல் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தன.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 56 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.No comments