வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவுள்ளது பிரித்தானியா


ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியா தடை செய்ய உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடை வரும்போது வாக்னர் குழுவில் சேர்ந்திருப்பது அல்லது இங்கிலாந்து சட்டங்களின் கீழ் அதை ஆதரிப்பது குற்றவியல் குற்றமாகும்.

பயங்கரவாதச் சட்டம் 2000 இன் கீழ் வாக்னர் குழுவைத் தடை செய்வதற்கான வரைவு நடவடிக்கைகள் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்னர் குழுவினர் வன்முறை, அழிவுகள், கொள்ளையடித்தல், சித்திரவதை மற்றும் காட்டுமிராண்டித்தனமான கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று டெய்லி மெயில் நாளிதழுக்கு உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.

வாக்னர் ஒரு வன்முறை மற்றும் அழிவுகரமான அமைப்பாகும், இது வெளிநாடுகளில் விளாடிமிர் புடினின் ரஷ்யாவின் இராணுவ கருவியாக செயல்பட்டது. புடினின் ஆட்சி தான் வாக்னர் குழு உருவாக்கப்பட்டது. வாக்னரின் தொடர்ச்சியான ஸ்திரமின்மை நடவடிக்கைகள் கிரெம்ளினின் அரசியல் இலக்குகளுக்கு மட்டுமே சேவை செய்கின்றன என அவர் மேலும் கூறினார்.


No comments