பிள்ளையான் தரப்பு தயாராம்!ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க பிள்ளையான் தரப்பும் கோரிக்கை விடுத்துள்ளது

 மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை பகிரங்கப்படுத்த கோரி ''குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே, உண்மையை உலகறியச்செய்'' எனும் தொனிப்பொருளில் கண்டன பேரணிஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் இன்று(10.09.2023) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கண்டன பேரணியானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்திலிருந்து கல்லடி பாலம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற இக்கண்டனப் பேரணியின் போது சனல்-4 காணொளிக்கு எதிராகவும், குரல் எழுப்பியிருந்தனர்.

இந்த கண்டன பேரணியானது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தண் தலைமையில் இடம்பெற்றிருந்தது.


No comments