வடக்கில் தண்ணி திறந்துவிடும் அரசு!
இலங்கை அரசு வடமாகாணத்தில் மதுபானச்சாலைகளை திட்டமிட்டு பெருமளவில் திறக்க அனுமதித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே வன்னியில் மதுபான சாலைகள் பலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களுக்கு அது வழங்கப்படுகின்றதா என்பது பிரச்சினையில்லை. ஆனால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேரத்தில் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது எதற்காக என வன்னி மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசாங்கத்துக்குள் தொடர்ந்து ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்களின் சகாக்களுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கி அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக கருதுகின்றோம். இது மக்களுக்கான அரசாங்கமாக இருக்காது” எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் பூநகரி முழங்காவில் பகுதிகளை தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மதுபானச்சாலைகளிற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment